வாக்குச்சீட்டின் உள்ளடக்கமும் விளக்கமும்
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும், அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்பதையும் 33 வருடங்களுக்கு முன்னரே தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தனர்.
இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது.
இந்த ஆணையை சர்வதேச சமுகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமுகம் இன்று நிற்கின்றது.
அண்மையில் இதற்கான முன்னுதாரணத்தை பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தன. நோர்வேயில் மக்கள் தீர்ப்பைக் கணிக்கும் முயற்சியை ஒழுங்கமைக்க பக்கசார்பற்ற பல்லினப் பண்பாட்டுப் பத்திரிகையான ஊத்றூப் (Utrop) முன்வந்துள்ளது.
இம் முயற்சி வெற்றிபெற நாம் அனைவரும் ஈழத்தமிழர் என்ற ஒரே தளத்தில் நின்று ஒன்றிணைந்து பங்களிப்போம்!
நிறுவுவதற்கு, நோர்வேவாழ் ஈழத்தமிழர்களின் 99% ஆன ஆதரவு வழங்கப்பட்டுள்ளது