இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு.
வாக்களிப்பில் முழுமையான இரகசியம் பேணப்படும்.
வாக்களிக்க வருபவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் எங்கும் பதியப்படவோ பேணப்படவோ மாட்டாது.
வாக்களிக்கும் தகுதிபெற்றோர்:
இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களில்;
1991ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் பிறந்து நோர்வேஜில் வசிப்பவர்கள்
இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணைவர்கள்
இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் (தாய் அல்லது தகப்பன் இலங்கைத் தமிழ்ப் பரம்பரையாக இருந்தாலும் பொருந்தும்)
அத்தாட்சிப் பத்திரம்
(பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்று)
கடவுச்சீட்டு [Passport (எந்த நாட்டில் வழங்கப்பட்டிருந்தாலும்)]
நோர்வேஜிய அரசால் வழங்கப்பட்ட அகதி அடையாளப் பத்திரம்
குறிப்பு:
இலங்கைத் தமிழ்ப்பரம்பரையில் பிறந்து வெளிநாட்டில் பிறந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் (ஊத்றுப் முகவரிடம் தமது வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்)
மேற்கூறிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல் நோர்வேஜில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மாத்திரம் கொண்டுவந்து, ஊத்றுப் முகவரிடம் தமது வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.