இறைமை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசினை நிறுவுவதற்கு, நோர்வேவாழ் ஈழத்தமிழர்களின் 99% ஆன ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

“ஊத்றுப்” பல்லினப் பண்பாட்டுப் பத்திரிகை நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்பு சம்பந்தமான ஊடக அறிக்கை

ஈழத்தமிழர் இறைமையையும், சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடாய் அமைந்திட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளவும் உறுதிப்படுத்தும் பொதுசன வாக்கெடுப்பானது, இலங்கைத்தீவில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேஜில் வதியும் 1991ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் பிறந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் எம்மால் 10.05.2009ஆம் திகதி நடத்தப்பட்டது. இவ்வாக்களிப்பில் தமது பங்களிப்பினை ஆற்றுவதற்கு இலங்கைத்தீவினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணைவர்கள், பரம்பரையினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் Oslo(மூன்று வாக்குச்சாவடிகள்), Bergen, Trondheim, Stavanger என நோர்வேஜின் முக்கிய நகரங்கள் உட்பட Tromsø, Lørenskog, Ålesund, Florø, Molde, Norfjordeid, Narvik, Bø முதலான இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பதிவு செய்வதனைத் தவிர்க்கும் நோக்கில் தபால்மூல வாக்களிப்பானது ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை.

கடவுச்சீட்டு [Passport (எந்த நாட்டில் வழங்கப்பட்டிருந்தாலும்)] அல்லது நோர்வேஜிய அரசால் வழங்கப்பட்ட அகதி அடையாளப் பத்திரம் என்பவற்றைக் கொண்டு வாக்காளர்கள் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தனர். வாக்களிப்பவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் எதையும் கொண்டிராத இவ்விரகசிய வாக்களிப்பு நிலையங்களுக்கு வருபவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் எங்கும் பதியப்படவில்லை. ஒருமுறை வாக்களித்தவர்கள் மறுமுறை வாக்களிக்க முடியாதவாறு அவர்களின் கைவிரலில் மையடையாளம் இடப்பட்டது.

நோர்வேரீதியிலான இவ்வாக்கெடுப்பின் பொறுப்பதிகாரியாக நோர்வேஜின் பிரபல சட்டத்தரணியான Leif Helge Frøynes அவர்களும், வாக்களிப்பு நிலையங்களின் ஏனைய செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக, நோர்வேஜிய தொழில்சார் உயரதிகாரிகள் மட்டத்திலான கனவான்கள் செயற்பட்டிருந்தனர்.

இச்சர்வசன வாக்கெடுப்பின் முடிவுகள் பின்வருமாறு

வாக்களிப்பு நடைபெற்ற இடங்கள்

ஆம்

இல்லை

பழுதானவை

Oslo – Stovner

1456

9

6

Oslo – Grorud

1421

9

0

Oslo - Bryn

1011

13

2

Stavanger

251

5

0

Bergen

536

4

0

Trondheim

157

1

0

Tromsø

37

0

0

Florø

76

5

0

Norfjordeid

41

1

0

Ålesund

205

1

0

Molde

79

1

0

Narvik

24

0

0

17

0

0

Lørenskog

263

1

1

 

5574

50

9

மொத்தம்

98.95%

0.89%

0.2%

வாக்களிக்கத் தகுதிவாய்ந்த தமிழர்கள் 8797

(ஏறக்குறைய 300 சிங்களவரும் இத்தொகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்)

(சிறியதொகையான தமிழர்கள் வாழும் இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை)

வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் 5633

வாக்களிப்பு வீதமானது தலைநகரான ஒஸ்லோவில் 89.8% ஆகவும், ஏனையபகுதிகளில் சராசரி 80% ஆகவும் அமைந்திருந்தது.

மேலதிக விபரங்களுக்கு: www.utrop.no